நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரியங்கா கேட்கும் 10 முக்கியக் கேள்விகள்!

தீவிர அரசியலில் குதித்திருக்கும் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

News image
Updated On :13 பிப்ரவரி 2019, 4:00 pm IST


லக்னௌ: தீவிர அரசியலில் குதித்திருக்கும் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள், அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரையும் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார் பிரியங்கா காந்தி.

இன்று காலை முதல் ஒவ்வொரு குழுவாக சந்தித்து ஆலோசனை நடத்திய பிரியங்கா காந்தி, 2 மணிக்கு மேல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.

இந்த நிலையில், கட்சித் தொண்டர்களிடம் ஒரு விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து தருமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.

அந்த விண்ணப்பத்தில், ஒவ்வொரு தொண்டரும் தன்னைப் பற்றிய விவரங்களை அளிக்கும் வகையில் 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதில், டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் இணைந்துள்ளீர்களா? உங்கள் ஜாதி, இனம் போன்றவை பற்றிய கேள்விகளும் இடம்பெற்றுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற செய்ய வேண்டிய தேர்தல் வியூகம் என்ன என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்து.

அது மட்டுமல்ல, ஒரு தொண்டர், எத்தனை காலமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறித்தும் விண்ணப்பத்தில் கேள்வி இடம்பெற்றுள்ளது. அதாவது, எவ்வளவு காலமாக நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளீர்கள்? கட்சியில் இதுவரை ஏதேனும் பதவியை வகித்திருக்கிறீர்களா? காங்கிரஸ் கட்சி சார்பில் ஏதேனும் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறீர்களா? என்பது போன்ற கேள்விகளும் உள்ளன.

கீழ்க்கண்ட இந்த கேள்விகள் எல்லாம் தொண்டர்களை திக்குமுக்காடச் செய்தவை..

இதுவரை தொண்டர்களைப் பற்றி கேள்விகள் இருந்தன. இறுதியாக தொண்டர்களை திக்குமுக்காடச் செய்யும் சில கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. அவை..

உங்களது வாக்குச்சாவடி எது? உங்கள் கிராம சபைத் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்? உங்கள் சட்டப்பேரவைத் தொகுதியில் எத்தனை கிராம சபைகள் உள்ளன? உங்கள் தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை வாக்குகள் பெற்றன என்ற கேள்விகளும்  இடம்பெற்றுள்ளது.

இந்த கேள்விகளை பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் தவிர்த்துவிட்டிருப்பதாக உள்ளிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.