நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: குடியுரிமை, முத்தலாக் மசோதாக்கள் காலாவதியாக வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமையோடு நிறைவடைந்த நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா ஆகியவை வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதியோடு காலாவதியாகின்றன.

News image
Updated On :14 பிப்ரவரி 2019, 1:24 am IST


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமையோடு நிறைவடைந்த நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா ஆகியவை வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதியோடு காலாவதியாகின்றன.
கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 16-ஆவது மக்களவை, சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா ஆகியவற்றை நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதாக்கள் அனுப்பப்பி வைக்கப்பட்டன. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் அவை நிலுவையில் இருந்தன. 
இந்நிலையில், கடந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வந்த நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர், புதன்கிழமையோடு நிறைவடைந்தது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், மாநிலங்களவை புதன்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதியோடு 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. எனவே, இந்த மசோதாக்களும் அத்துடன் காலாவதியாகின்றன. 17-ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.     
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பாரசீகர்கள், சமணர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை அளிக்க வகைசெய்யும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த மசோதாவுக்கு எதிராக அங்கு பல்வேறு தரப்பினர் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
முஸ்லிம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையைச் சட்டப்படி தடை செய்யும் நோக்கில், முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.