கும்பமேளாவில் புனித நீராடினாலும், செய்த பாவங்கள் போகாது என்று பிரதமர் நரேந்திர மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு புனித நீராடினார். இதையடுத்து, துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி, மோடி சேவை செய்தார். இதை மாயாவதி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் ஏமாற்றியது, பிற தவறுகள் ஆகியவற்றினால் செய்த பாவங்களை போக்குவதற்கு, கும்பமேளாவில் புனித நீராடுவது எந்த வகையிலும் உதவாது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பழிவாங்குதல், சாதீயம், மதவாதம் மற்றும் சர்வாதிகாரமான ஆட்சி ஆகியவற்றின் மூலம் தங்களது வாழ்க்கையை பரிதாபகரமான நிலைக்கு தள்ளியதற்கு பாஜகவை நாட்டு மக்கள் மன்னிப்பது சாத்தியமில்லை என்று அந்த பதிவில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மோடி, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் குறித்தும் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து சுட்டுரை பதிவுகளில் மாயாவதி கூறியிருப்பதாவது:
விவசாய உதவித் தொகையாக மத்திய அரசு மாதத்துக்கு ரூ.500 வழங்குகிறது. இந்தத் தொகை, கூலித் தொழிலாளர்களுக்கு வேண்டுமானால் பயனளிக்கலாம். ஆனால் விவசாயிகளுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. தங்களது பயிர்களுக்கு உரியத் தொகை அளிக்க வேண்டும் என்றே விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை மோடி அரசு தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


