இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மிஸோரம்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் தலைமையகத்தை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு

மிஸோரம் மாநிலத் தலைநகர் ஐசாலில் இயங்கி வரும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகத்தை வரும் மே 15-ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:24 am IST

மிஸோரம் மாநிலத் தலைநகர் ஐசாலில் இயங்கி வரும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகத்தை வரும் மே 15-ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர், திங்கள்கிழமை கூறியதாவது: மிஸோரமில் கடந்த 1988-ஆம் ஆண்டில் முதல்வர் லால்தங்கா தலைமையில் மிஸோ தேசிய முன்னணியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது முதல், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரின் தலைமையகம், தலைநகர் ஐசாலில் உள்ள ஜோடின் சதுக்கத்தில் இயங்கி வருகிறது. இதனிடையே, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகத்தை, வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மிஸோரம் அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தலைநகர் ஐசாலில் இருந்து 15 தொலைவில் உள்ள ஜோகாவ்சங் என்ற இடத்தருகே அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினருக்குப் புதிய தலைமையகம் கட்டப்பட்டு வந்தது. 
கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், தலைமையகத்தை ஐசால் நகரில் இருந்து, வரும் மே மாதம் 15-ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தலைமையகம் இடம் மாற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு  அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.