மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தில்லிக்கு வடக்கே வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தில்லி மற்றும் தில்லிக்கு வடக்கே உள்ள அனைத்து வான் பகுதியிலும் பயணிகள் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 9:21 am

PTI

புது தில்லி: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தில்லி மற்றும் தில்லிக்கு வடக்கே உள்ள அனைத்து வான் பகுதியிலும் பயணிகள் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், பயணிகளின் பாதுகாப்புக்காகவும், தில்லிக்கு வடக்கே வான் பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

உத்தரகாண்டின் டேஹ்ராடூன் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் முற்றிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

எந்த சூழ்நிலையையும் கையாள வான்பகுதி தயார் நிலையில் வைக்கும் பொருட்டு, இந்தியாவின் தலைநகர் தில்லிக்குக் கிழக்கே உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.