விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்? 

ஆளில்லா இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலை இந்தியா மறுத்துள்ளது. 

News image
Updated On :2 ஜனவரி 2019, 1:21 pm

இஸ்லாமாபாத்: ஆளில்லா இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலை இந்தியா மறுத்துள்ளது. 

ஆளில்லா இந்திய உளவு விமானத்தை தங்கள் நாட்டு ராணுவப் படை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியாவின் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பறந்து சென்றது. அதை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. எந்த ஒரு விமானத்தையும் எங்கள் பகுதியில் பறக்க அனுமதிக்க மாட்டோம். 

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.