கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

காவல் நிலையத்தின் உள்ளே இளைஞரை கண்மூடித்தனமாகத் தாக்கிய மாவட்ட நீதிபதி (வைரல் விடியோ) 

தனது மனைவிக்கு ஆபாச செய்தி அனுப்பியதற்காக காவல் நிலையத்தின் உள்ளே இளைஞரை மாவட்ட நீதிபதி  ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் நிக்லாந்துள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2019, 10:05 am

அலிபுர்துவார்: தனது மனைவிக்கு ஆபாச செய்தி அனுப்பியதற்காக காவல் நிலையத்தின் உள்ளே இளைஞரை மாவட்ட நீதிபதி  ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் நிக்லாந்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் நிகில் நிர்மல். இவரது மனைவி  நந்தினி கிருஷ்ணன். இவருக்கு பினோத் சர்கார் என்னும் இளைஞர் பிரபல சமூக வலைத்தளமொன்றில் தொடர்ந்து  ஆபாச  செய்திகள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

எனவே அவர்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலகட்டா காவல் நிலையத்தில் நந்தினி புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் பினோத் சர்கார் ஞாயிறன்று கைது செய்யயப்பட்டார். காவல் நிலையத்தில் அவர் வைக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த நிகில் நிர்மல் மற்றும் நந்தினி இருவரும் சர்காரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அத்துடன் அவரை கொலை செய்து விடுவதாகவும் நிர்மல் மிரட்டியுள்ளார். இந்தக் காட்சியானது கேமராவில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சர்கார் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதே நேரம் புகார்களின் காரணமாக நிகில் நிர்மல் தற்போது விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். 

(thanks: NDTV)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.