டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொதுப்பிரிவினருக்கான 10%  இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு 

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10%  இட ஒதுக்கீடு  வழங்கும் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:51 am

DIN

புது தில்லி: பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10%  இட ஒதுக்கீடு  வழங்கும் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி,  வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றியுள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

'சமத்துவத்திற்கான இளைஞர்' என்னும் அமைப்பு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த மசோதாவானது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிராக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும்  எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.