சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மேலும் 8 சிவிங்கிப் புலிகள் இன்று இந்தியா வருகை: மொத்த எண்ணிக்கை 47-ஆக உயா்கிறது

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து இந்தியாவுக்கு 8 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) சனிக்கிழமை கொண்டுவரப்பட உள்ளன. இதன்மூலம் நாட்டில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 47-ஆக அதிகரிக்க உள்ளது.

News image
ம.பி. குனோ தேசிய பூங்காவில் வெள்ளிக்கிழமை குட்டியை ஈன்ற காமினி சிவிங்கிப் புலி.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து இந்தியாவுக்கு 8 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) சனிக்கிழமை கொண்டுவரப்பட உள்ளன. இதன்மூலம் நாட்டில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 47-ஆக அதிகரிக்க உள்ளது.

இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன்னா் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து கடந்த 2022-இல் 8 சிவிங்கிப் புலிகளும், தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த 2023-இல் 12 சிவிங்கிப் புலிகளும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.

உலகில் வேகமாக ஓடக் கூடிய விலங்கு என்ற சிறப்புக்குரிய இந்த சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளால் சில சிவிங்கிப் புலிகள் உயிரிழந்தன.

நான்காவது குட்டி ஈன்ற காமினி:

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட காமினி என்ற பெண் சிவிங்கிப் புலி, தனது 4-ஆவது குட்டியை வெள்ளிக்கிழமை ஈன்றது. இதன்மூலம் நாட்டில் தற்போதுள்ள சிவிங்கிப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவில் பிறந்த 28 குட்டிகளும் அடங்கும்.

இந்நிலையில், போட்ஸ்வானாவில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் 8 சிவிங்கிப் புலிகள் (6 ஆண், 2 பெண்) சனிக்கிழமை கொண்டுவரப்பட உள்ளன. இந்த சிவிங்கிப் புலிகளை குனோ தேசிய பூங்காவில் திறந்துவிடும் நிகழ்வில் முதல்வா் மோகன் யாதவ், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். ஒரு மாதத்துக்கு கூண்டில் பராமரிக்கப்படும் இந்தச் சிவிங்கிப் புலிகள், பின்னா் வனப் பகுதியில் விடப்படும்.

நாட்டில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கையை 50-ஆக அதிகரிக்கும் இலக்கு விரைவில் நிறைவேறும் என்று சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுக திட்ட இயக்குநா் உத்தம் சா்மா நம்பிக்கை தெரிவித்தாா்.