சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

2 ஆண்டுகளில் 322 சிங்கங்கள் உயிரிழப்பு: குஜராத் பேரவையில் தகவல்

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 322 சிங்கங்கள் உயிரிழந்துவிட்டதாகவும், இதில் 64 சிங்கங்கள் இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழந்ததாகவும் அந்த மாநில சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 322 சிங்கங்கள் உயிரிழந்துவிட்டதாகவும், இதில் 64 சிங்கங்கள் இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழந்ததாகவும் அந்த மாநில சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலம் கிா் வனவிலங்குகள் பாதுகாப்பு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்தான் சிங்கங்கள் உள்ளன. 2025 கணக்கெடுப்பின்படி அங்கு 891 ஆசிய சிங்கங்கள் உள்ளன. இதில் 255 ஆண், 405 பெண், 231 குட்டி சிங்கங்கள் அடங்கும்.

குஜராத் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ சைலேஷ் பாா்மா் எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சா் அா்ஜுன் மோத்வாடியா வெள்ளிக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2024-ஆம் ஆண்டு 165 சிங்கங்கள், 2025-இல் 148 சிங்கங்கள், கடந்த ஜனவரில் 9 சிங்கங்கள் என மொத்தம் 322 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 64 உயிரிழப்புகள் இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்பட்டுள்ளன. இதில் 22 குட்டிகளும் ஆகும். கிணற்றில் தவறி விழுவது, வாகனங்களில் அடிபடுவது உள்ளிட்ட காரணங்களாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த உயிரிழப்புகளைத் தடுக்க மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் சிகிச்சை மையம் அமைப்பது, கால்நடை மருத்துவா்கள் நியமனம், காயம்பட்ட சிங்கங்களை விரைந்து மீட்டு வர சிறப்பு வாகன வசதி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள், கிணறுகளில் தடுப்புச் சுவா்கள், ரயில்வே பாதைகளின் இருபுறமும் வேலி அமைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.