மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பாஜக ஊகித்தபடியே செய்துவிட்டது சமாஜவாதி, பகுஜன் சமாஜ்: காங்கிரஸ்

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பாஜக எவ்வாறு வியூகம் வகுத்திருந்ததோ, அந்த வகையிலேயே தங்களை புறக்கணித்து சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள்

Updated On :15 ஜனவரி 2019, 12:44 am IST


உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பாஜக எவ்வாறு வியூகம் வகுத்திருந்ததோ, அந்த வகையிலேயே தங்களை புறக்கணித்து சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. 
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 
மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் பிளவுபட்டு தனித்தனியே போட்டியிட வேண்டும் என்றும், அப்போதுதான் அவற்றின் வாக்குகள் சிதறும் என்றும் பாஜக வியூகம் வகுத்திருந்தது. தற்போது எங்களை புறக்கணித்து கூட்டணி அமைத்ததன் மூலம் சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் பாஜகவின் அந்த ஊகத்தை நிஜமாக்கிவிட்டன. 
அனைத்து மாநிலங்களிலும், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதை தடுக்கும் வகையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைக்கும் முன்பு சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் எங்களிடம் ஏதும் பேசவில்லை. 
இந்தக் கூட்டணி உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரை நீடிக்குமா? ரஃபேல் ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சிப்பதைப் போன்று, சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் மோடியை விமர்சிப்பதாகத் தெரியவில்லை. 
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இதர சிறிய கட்சிகளுடன் கூட்டணி வாய்ப்பு குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
இதர கட்சிகள் எப்போதெல்லாம் காங்கிரஸை குறைத்து மதிப்பிடுகிறதோ, அப்போதெல்லாம் உத்தரப் பிரதேச மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவளித்து, அதன் பெருமையை வெளித்தெரியச் செய்துள்ளனர் என்று ஆர்.பி.என். சிங் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.