/

இதற்குப் பெயர்தான் எலக்ட்ரிக் ஷாக்கோ.. உத்தரப்பிரதேச குடிமகனுக்கு நேர்ந்த கொடுமை

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மின் சாதனத்தைத் தொடாமலேயே எலக்ட்ரிக் ஷாக் அடித்துள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2019, 12:45 pm IST

கன்னௌஜ்: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மின் சாதனத்தைத் தொடாமலேயே எலக்ட்ரிக் ஷாக் அடித்துள்ளது.

கன்னௌஜ் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். அவர் வீட்டில் பயன்படுத்திய மின்சாரத்தின் மொத்த யூனிட் 178. அதற்கு சில சொற்பத் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக அவருக்கு வந்திருக்கும் மின் கட்டணத் தொகை ரூ.23 கோடியே 67 லட்சத்து 71,524 ஆகும்.

அதிர்ந்து போன அப்துல் பாசித், மின்சார வாரியத்திடம் புகார் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.