புது தில்லி: விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக தங்கை பிரியங்கா காந்தியை நியமித்து, கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டிலேயே அதிக பட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 எம்.பி தொகுதிகள் அமைந்துள்ளன. இங்கு வெற்றி பெரும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இரு பெரும் கட்சிகளும் இங்கு அதிக அக்கறை காட்டி வருகின்றன.
முன்னதாக பழைய கசப்புகளை மறந்து பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கவிருப்பதாக அறிவித்தன. உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக வலுவான கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரசுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
எனவே இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அறிவித்துது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக தங்கை பிரியங்கா காந்தியை நியமித்து, கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு முன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் ப்ரியங்கா காந்தி மட்டும் பிரசாரம் செய்து வந்தார். தற்போது அவருக்கு காங்கிரஸ் தலைமை புதிய பதவியை வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


