புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பணித்திறன் குறைவு: மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐவருக்கு கட்டாய ஓய்வு 

வருடாந்திர தணிக்கையில் பணித்திறன் குறைவு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2019, 11:48 am

புது தில்லி: வருடாந்திர தணிக்கையில் பணித்திறன் குறைவு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு வருடமும் வருடாந்திரத் தணிக்கை நடைபெறுவது வழக்கம். இதில் நிதி வரவு மற்றும் செலவு உட்பட பல்வேறு செயல்பாடுகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். 

அந்த வரிசையில் மத்திய பாதுகாப்புத்துறையின் குடிமைப்பணி அதிகாரிகள் சுமார் 500 பேரின் செயல்பாடுகளும் தணிக்கை செய்யப்பட்டது. 30 வருடப் பணி அனுபவத்துடன், 55 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது தணிக்கைக்கு தகுதியாக வரையறுக்கப்பட்டது.

தணிக்கை முடிவுகளின் அடிப்படையில் திறம்படப் பணியாற்றவில்லை எனத் தெரிய வந்ததன் பேரில், ஐந்து உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளிக்க, அந்த துறையின் அமைச்சர்  அமைச்சர் நிர்மலா கடந்த செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல கடந்த ஆகஸ்ட் 2017-ல் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 13 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.