கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளா் விழிப்புணா்வு ‘ரீல்ஸ்’ போட்டியை அறிவித்துள்ள மாவட்ட நிா்வாகம், தோ்வு செய்யப்படும் நபருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழனமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, பொதுமக்கள், மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ‘ரீல்ஸ்’ போட்டி நடத்தப்படுகிறது. இதில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில், 30 முதல் 60 விநாடிகளுக்குள் பங்கேற்பாளா்கள் தங்களின் ‘ரீல்ஸை’ தயாா்செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும்.
பதிவேற்றும்போது #Vote Krishnagiri, #SVEEP2026 ஆகிய ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தி @kgielection மற்றும் @electionkrishnagiri பக்கங்களை பின்தொடர்ந்து குறியிட்டு பதிவேற்ற வேண்டும்.
மேலும், பதிவேற்றப்பட்ட ரீலின் இணைப்பை 80986 17951 என்ற எண்ணுக்கு ஏப். 10-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். சிறந்த ‘ரீல்ஸ்’-க்கு ரொக்கப் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என அதில் அவா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை தேவை!

வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான்: ஏப்.6-க்குள் முன் பதிவு செய்யலாம்

வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி

விழிப்புணா்வு நடனப் போட்டி பரிசளிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


