/

அமர்ஜவான் ஜோதி: பிரதமர் மோடி மரியாதை

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:58 am

DIN

நாட்டின் 70-ஆவது குடியரசு தினத்தையொட்டி தில்லி அமர்ஜவான் ஜோதியில், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது உயிர் நீத்த வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து தில்லியில் தேசியக் கொடி ஏற்றவுள்ள ராஜ்பாத் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினரான தென் ஆப்பிரிக்க அதிபர் சைரில் ராமபோசா, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.