டாடா நானோ காருக்கு விடைகொடுக்கும் நேரம் வருகிறது: காரணம் இதுதான்!
மிக விலைக் குறைவான கார் என்ற அடையாளத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ காருக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.


மிக விலைக் குறைவான கார் என்ற அடையாளத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ காருக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.
2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு டாடா நானோ காருக்கு பிரியா விடை கொடுக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரத்தன் டாடாவின் கனவு திட்டம் என்பதால் இத்தனை காலம் பல தடைகளையும் தாண்டி இந்த டாடா நானோ கார் உற்பத்தியை நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
ஆனால், தற்போது மத்திய அரசு விதித்திருக்கும் இரண்டு முக்கிய விதிகளால், டாடா நானோ கார் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, கார் பாதுகாப்பு விதியான பாரத் என்சிஏபி மற்றும் பிஎஸ்6 தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது. இவ்விரண்டு விதிகளையுமே டாடா நானோவால் ஈடுசெய்ய முடியாது.
இவ்விரண்டு விதிகளை பூர்த்தி செய்து டாடா நானோ காரை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், அதற்கு அதிகம் செலவாகும் என்பதால், டாடா நானோ காரின் உற்பத்தியை நிறுத்த டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டாடா நானோ காரின் விற்பனை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் உற்பத்தியே முற்றிலும் நிறுத்தப்படுகிறது. அதாவது 2017 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் 872 டாடா நானோ விற்பனையான நிலையில், 2018ல் இது 65 ஆகக் குறைந்தது. 2018 ஜூன் மாதம் 3 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், அப்போது ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...