பனாஜி: ராகுலிடம் ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறுப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தனது தாயாரான சோனியாவுடன் கோவாவுக்குச் செண்டிருந்தார். தற்போது உடல்நலக் குறைவால் ஓய்விலிருக்கும் அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரை, அவர் செவ்வாயன்று காலை பாரிக்கரின் அலுவலகத்திற்கே சென்று சந்தித்தார். மரியாதை நிமித்தமானது இந்த சந்திப்பு என்று பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் தெரிவித்தார்.
பின்னர் செவ்வாய் மாலை கொச்சினில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், 'ரஃபேல் விவகாரத்தில் எனக்கு எதுவும் தெரியாது; பிரதமர் மோடி கூறியதையே நான் செய்தேன்' என்று மனோகர் பாரிக்கர் கூறியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுலிடம் ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை என்று ராகுல் காந்திக்கு கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறுப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள கடிதத்தில் பாரிக்கர் கூறியுள்ளதாவது:
நமது சந்திப்பு வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடித்தது; தற்செயலானதும் கூட. உங்களுடனான எனது சந்திப்பில் ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை. நீங்கள் என்னை சந்தித்தது ஆரோக்கியமான நாகரீகம் என்று நினைத்தேன் . ஆனால் உங்களது சந்திப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
இவ்வாறு பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!
உதயநிதி கைது - நேரலை!

கைதாகிறாரா உதயநிதி? பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சி: ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



