சென்னை: மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக நாடுமுழுவதும் வெள்ளி நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரவுள்ளன.
வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 - 20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரி ஒரு ரூபாயும், சாலைகள் மீதான 'செஸ்' வரி ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக நாடுமுழுவதும் வெள்ளி நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரவுள்ளன.
உயர்த்தப்பட்ட வரிகளுடன் உள்ளூர் வரிகளும் கூடுதலாக இணையும் என்பதால் நாட்டில் வெவேறு இடங்களில் விலைகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.
இருந்த போதிலும் பெட்ரோல் விலை குறைந்தபட்சமாக 2.50 ரூபாயும்,. டீசல் விலை 2.30 ரூபாயும் உயரும் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வானது வெள்ளி நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


