புகைப்படம்: ஏஎன்ஐ
புகைப்படம்: ஏஎன்ஐ

2022ம் ஆண்டில் இந்தியா இப்படி இருக்கும்: சொல்கிறார் நிதித் துறை அமைச்சர்

2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பல்வேறு மேம்பாடுகள் நடந்திருக்கும் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Published on


புது தில்லி: 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பல்வேறு மேம்பாடுகள் நடந்திருக்கும் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இன்று அவர் அறிவித்த மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது, 

கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் எல்பிஜி கேஸ் இணைப்புப் பெற்றிருக்கும்.

நாடு முழுவதும் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும்

2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார இணைப்பு இல்லாத வீடே இல்லை என்கிற நிலை ஏற்படும்.

2022ம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினரும் சொந்தமாக வீடு பெற்றிருப்பார்கள்.

நாடு முழுவதும் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com