முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மக்களவைக்கு மதியத்துக்கு மேல் வந்த ராகுல் முதல் முறையாக செய்த ஒரு காரியம்!

கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் சர்ச்சைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மக்களவையில் கோஷம் எழுப்பினார்.

News image
Updated On :9 ஜூலை 2019, 9:39 am

PTI


புது தில்லி: கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் சர்ச்சைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மக்களவையில் கோஷம் எழுப்பினார்.

17வது மக்களவையில் முதல் முறையாக ராகுல் காந்தி இவ்வாறு ஒரு பிரச்னை குறித்து கோஷம் எழுப்பியுள்ளது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியத்துக்கு மேல் மக்களவைக்கு வந்தார் ராகுல். அப்போது கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை வாங்க பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி கோஷம் எழுப்பினார்.

அவருடன் ஜனநாயகத்தைக் காப்பது உங்கள் கடமை என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

இதற்கு அவைத்தலைவர் பதில் அளித்தும், அதனால் திருப்தி அடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் கோஷத்தில் ஈடுபட்டார். ஆனால் என்ன அவரது கோஷம், மற்ற உறுப்பினர்களின் கோஷத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. பிறகு, கோஷத்தின் கடைசி வார்த்தையை மட்டும் சேர்ந்து சொல்லத் தொடங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.