பெங்களூரு: கர்நாடகாவில் தொடரும் அரசியல் நெருக்கடியின் தொடர்ச்சியாக மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரு நாட்களில் பதவி விலகிய 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவை ஏற்குமாறு சபாநாயகரை அறிவுறுத்த வேண்டும் என்று கோரி, கர்நாடக மாநில ஆளுநரிடம் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா புதனன்று மனு அளித்தார்.
முன்னதாக சபாநாயகர் ரமேஷ் குமாரை சந்தித்த எடியூரப்பா 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்றும், உரிய நடைமுறைகளை பின்பற்றி வரும் 17-ம் தேதிக்குள் எனது முடிவை அறிவிப்பேன் என்று அவரிடம் சபாநாயகர் ரமேஷ் குமார் பதிலளித்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் தொடரும் அரசியல் நெருக்கடியின் தொடர்ச்சியாக மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களான எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் புதன் மாலை சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதன் காரண்மாக குமாரசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி முற்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


