ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் 

தலைநகர் தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2019, 1:55 pm

DIN

புது தில்லி: தலைநகர் தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவில் பெரும் நகரங்களில் போதைப்பொருட்கள் நடமாட்டம் சமீபமாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லையின் வழியாக போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் கடத்தப்படுகிறது. இதனால் எல்லையில் தீவிர கண்காணிப்பு தொடர்கிறது.

இந்நிலையில் தலைநகர் தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தில்லியில் சிறப்புப் படை போலீஸ் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் சுமார் 150 கிலோ எடையிலான ஹெராயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அதனுடைய மதிப்பு ரூ. 600 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டைப் சேர்ந்த  ஒருவர் உள்பட 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.