ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வயநாடு விவசாயி தற்கொலை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதில் கடிதம்

வயநாட்டைச் சேர்ந்த வி.டி. தினேஷ் குமார் (53) என்ற விவசாயி ரூ.10 லட்சம் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

News image
Updated On :1 ஜூன் 2019, 6:31 am

DIN

வயநாட்டைச் சேர்ந்த வி.டி. தினேஷ் குமார் (53) என்ற அந்த விவசாயி 3 வங்கிகளில் ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் நெருக்கடி காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸார் கடந்த மாதம் 25-ஆம் தேதி கூறியிருந்தனர். 

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு மாநில முதல்வர் பினராயி விஜயனை, காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறும் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்தார். 

இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், விவசாயி தற்கொலையின் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும், நிதியுதவி அளிப்பது தொடர்பாகவும் ஆய்வறிக்கையை சமர்பிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.