ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மூவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ காவல் 

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த விவகாரம் தொடர்பாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மூவருக்கு 10 நாள் தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ) காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2019, 1:54 pm

DIN

புது தில்லி: பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த விவகாரம் தொடர்பாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மூவருக்கு 10 நாள் தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ) காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுக்க 2017-ம் ஆண்டு அதிரடி நடவடிக்கையை தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்டது. அமலாக்கப்பிரிவும் இந்த விசாரணையை சேர்ந்து நடத்தியது. இது தொடர்பாக பலர் கைதும் செய்யப்பட்டனர்.

அவர்களில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மசாரத் அலாம், ஷாபீர் ஷா மற்றும் ஆசியா அண்டரபி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மூவரும் செவ்வாயன்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் மூவரையும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஆணையத்திற்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு இவர்கள் நிதி திரட்டும்  என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.