ஜார்க்கண்ட் மாநில எல்லையில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் ஐந்து போலீசார் பலி 

ஜார்க்கண்ட் மாநில எல்லையில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து போலீசார் பலியாகினர்.
ஜார்க்கண்ட் மாநில எல்லையில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் ஐந்து போலீசார் பலி 

ஜம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநில எல்லையில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து போலீசார் பலியாகினர்.

மேற்கு வங்காளம் - ஜார்க்கண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ளது சாராய்காலா மாவட்டம். இங்கு வெள்ளியன்று மாலை சந்தைப் பகுதியின்றில் போலீசார் வழக்கமான ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது மறைந்திருந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர். அத்துடன் போலீசாரிடம் இருந்து ஆயுதங்களையும் மாவோயிஸ்ட்கள் பறித்துச் சென்றனர்.

தற்போது அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்வர் ராகுபார் தாஸ் கிடைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com