அரபிக் கடலில் உருவாகி குஜராத்தைக் கடந்து சென்ற வாயு புயலானது, மீண்டும் யு டர்ன் அடித்து குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாயு புயலானது கடந்த புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை காலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஆனால் கடைசி நேரத்தில் குஜராத்தின் கரைப் பகுதியைக் கடக்காமல் கடந்து சென்றது வாயு புயல். நூலிழையில் தப்பியதாக குஜராத் அரசும், மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஆனால், சென்ற வேகத்தில் யு டர்ன் அடித்து மீண்டும் குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஜூன் 16ம் தேதி குஜராத்தை நெருங்கி வந்து, 17 - 18ம் தேதிக்கு இடையே கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அதி தீவிரப் புயலாக இருக்கும் வாயு, குஜராத்தை நெருங்கும் போது புயல் சின்னமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்துதான் கரையைக் கடக்கும் என்று புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புதன்கிழமை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்கள் நேற்று முதல் தங்களது பகுதிக்கு திரும்பியதும், இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் குஜராத்தை அச்சுறுத்தும் வாயு புயலால் முன்னேற்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.: திருமண விழாவில் உணவு நஞ்சானதால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
ரூ. 50 கோடியை நெருங்கும் யூத்!

ஜம்மு-காஷ்மீர்: சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் காயம்
தவெகவில் புதிதாக ஐக்கியமான செல்வம் சேப்பாக்கத்தில் போட்டி!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

