ஊழல்வாதிகள் என்றால் ஏன் சோனியாவையும் ராகுலையும் சிறையில் அடைக்கவில்லை? 

ஊழல்வாதிகள் என்றால் ஏன் சோனியாவையும் ராகுலையும் சிறையில் அடைக்கவில்லை? என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்றால் ஏன் சோனியாவையும் ராகுலையும் சிறையில் அடைக்கவில்லை? 

புதுதில்லி: ஊழல்வாதிகள் என்றால் ஏன் சோனியாவையும் ராகுலையும் சிறையில் அடைக்கவில்லை? என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் திங்களன்று பேசிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி 'காங்கிரஸ்   ஆட்சிக்காலம் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல்களால் நிரம்பியது’ என்று கடுமையாக விமர்சித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதற்கு பதிலளித்துக் கூறியதாவது:

ஊழல்வாதிகள் என்றால் ஏன் சோனியாவையும் ராகுலையும் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை? அவர்களை நீங்கள் இந்த வழக்குகளில் கைது செய்து விடுவீர்களா? காங்கிரஸ் தலைவர்களை திருடர்கள் என்று கூறித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அந்த தலைவர்கள் எல்லாரும் இப்போது இங்குதான் அமர்ந்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி ஒரு சிறந்த விற்பனையாளர். அவர் தனது பொருட்களை நன்கு விற்பனை செய்கிறார். ஆனால் அதே நேரம் காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் அணைகள் கட்டியும், கணிப்பொறியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தும், விண்வெளி மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பங்களில் வளர்ச்சியை அடைந்தும் அதைப்பற்றியெல்லாம் பேசி விற்பனை செய்யவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com