நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அடுத்த காங்கிரஸ் தலைவர்? ராகுலுடன் மூத்த தலைவர்கள் சந்திப்பு

அடுத்த தலைவராக தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் பெயரையும் பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதாகவும் தெரிகிறது. 

News image
Updated On :28 ஜூன் 2019, 5:31 am

DIN

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை.

சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. அமேதியில் போட்டியிட்ட ராகுல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

எனவே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் தெரிவித்தார். அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது.

ஆனால், பதவி விலகும் முடிவில் ராகுல் உறுதியாக உள்ளார். அடுத்த தலைவராக தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் பெயரையும் பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதாகவும் தெரிகிறது. 

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மூத்த தலைவர்களான அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, தருண் கோகோய், உம்மன் சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. 

இந்நிலையில், பி.சி.சாக்கோ, ஷீலா தீட்சித், கே.சி.வேணுகோபால், அஜன் மாக்கன், ஜெ.பி.அகர்வால், மஹாபல் மிஷ்ரா மற்றும் அர்விந்தர் லவ்லி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.