ஹவேரி: பயங்கரவாதி மசூத் அஸாரை விடுவித்த பாஜக அரசு தான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
அதாவது, கந்தகார் விமானக் கடத்தலின் போது பாஜக தலைமையிலான அரசு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸாரை விடுவிக்காமல் போயிருந்தால் புல்வாமா தாக்குதலே நடந்திருக்காதே என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல், விமானக் கடத்தலின் போது பயணிகளை விடுவிக்க, பயங்கரவாதி மசூத் அஸாரை விடுவிப்பது என்ற வாஜ்பாயி அரசின் முடிவை கடுமையாக விமரிசித்திருக்கும் ராகுல், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்துக்கு எப்போதும் அடிபணிந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சீனப் பிரதமருடன் படகில் அமர்ந்து மோடி படகுப் பயணம் செய்து கொண்டிருந்த போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குட்பட்ட டோக்லாமை கைப்பற்றியது. இது உலகுக்குத் தெரியும். ஆனால் அது அப்போது மோடிக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் ராகுல் மிகக் காட்டமாகப் பேசினார்.
மோடி ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறுகிறார். ஆனால் அவர்தான் ஊழலே. அனில் அம்பானியின் பாக்கெட்டில் மோடி ரூ.30 ஆயிரம் கோடியை போட்டுள்ளார் என்றும் ராகுல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சகோதரியை அடித்தவரை கண்டித்த அண்ணன் மீது தாக்குதல்: இளைஞா் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

அரசுப் பேருந்தில் கட்சிப் பெயா்: காவல் துறையினா் விசாரணை

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


