

திருவல்லா: கேரளாவில் தன்னுடனான நட்பை முறித்துக் கொண்ட பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி,பெட்ரோல், ஊற்றி எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அஜின் ரேஜி மேத்யூ மற்றும் கவிதா இருவரும் நண்பர்கள். பள்ளியில் துவங்கி அவர்களது நட்பு கல்லூரி வரை தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் உனது நட்பை விரும்பவில்லை என்று கவிதா வாலிபர் மேத்யூவிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மேத்யூ, இளம்பெண் கவிதா மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று கல்லூரிக்கு சென்ற மாணவி கவிதாவை இடைமறுத்து வாக்குவாதம் செய்துள்ளான். தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியினால் அவரை குத்தியுள்ளான். பின்னர் இரண்டு பாட்டில்களில் கொண்டுவந்த பெட்ரோலை கவிதா மீது ஊற்றி தீ வைத்துள்ளான்.
உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அந்தப் பெண்ணை மீட்டு திருவல்லா அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே தப்பி ஓட முயன்ற மேத்யூவையும் அவர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட கவிதா 60 சதவித தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து காவல்துறையினர் அஜின் மேத்யூ மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.