கவுகாத்தி: இந்தியாவை உலுக்கிய சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட துறவி அசீமானந்த் உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்துநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி தில்லியில் இருந்து லாகூர் சென்ற சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 16 பேர் குழந்தைகள். அதோடு, உயிரிழந்தவர்களில் 42 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அபிநவ் பாரத் என்ற அமைப்பின் உறுப்பினரும், துறவியுமான அசீமானந்த், லோகேஷ் சர்மா, ராஜேந்தர் சவுத்ரி உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சாமியார் அசீமானந்த் மற்றும் லோகேஷ் சர்மா கைது செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனில் ஜோஷி என்பவர் திடீரென மரணமடைந்தார்.
இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகாமை விசாரித்தது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை, ஹாரியானாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பை மார்ச் 11 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட துறவி அசீமானந்த் உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்துநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதனன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேசிய புலனாய்வு முகமை போலீசார்தவறிவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட துறவி அசீமனந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான் மற்றும் ராஜேந்தர் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


