விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மோடி அறிவித்த 'மிஷன் சக்தி': செயற்கைக்கோளை அழித்த ஏவுகணை தொடர்பான விடியோ வெளியீடு 

பிரதமர் மோடி புதனன்று காலை அறிவித்த 'மிஷன் சக்தி' தொடர்பான விடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2019, 2:33 pm

DIN

புது தில்லி: பிரதமர் மோடி புதனன்று காலை அறிவித்த 'மிஷன் சக்தி' தொடர்பான விடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி புதன் நண்பகல் உரையாற்றினார்.

மோடியின் உரை தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அப்போது மோடி கூறியதாவது, மிஷன் சக்தி என்ற  பெயரில் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தி இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இன்று இந்தியா எட்டியுள்ளது.

இது, இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் செயற்கைக் கோளை அழிக்கும் முயற்சியைத் தடுக்கும் வகையில், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெறும் 3 நிமிடங்களில் விண்வெளியில் இருந்த செயற்கைக் கோள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்று மோடி பெருமிதத்துடன் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி புதனன்று காலை அறிவித்த 'மிஷன் சக்தி' தொடர்பான விடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

32 நொடிகள் ஓடக்கூடிய இந்த விடியோவில் ஏவுதளத்திலிருந்து ஏவுகணை விண்ணில் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த விடியோவை டி.ஆர்.டி.ஓ வெளியிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.