காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காங்கிரஸ் ஆட்சியில் 6 துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: பட்டியலிட்ட ராஜீவ் சுக்லா

இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:

News image
Updated On :2 மே 2019, 3:33 pm

DIN

காங்கிரஸ் ஆட்சியில் 6 துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா, அதனை பட்டியலிட்டு கூறியதாவது:

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் 6 துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. 

2008-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பட்டல் பகுதியில் முதல் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதிகளில் நீலம் நதிக்கரைப் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள ஷர்தா எனுமிடத்தில் 2-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2013-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி சாவன் பத்ரா சோதனைச் சாவடி அருகில் 3-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2013-ஆம் ஆண்டு ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நசபிர் பகுதியில் 4-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு 6-ஆம் தேதி நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் 5-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2014-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி 6-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.