புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

'ராகுலைக் காணோம்': அமேதியில் இரவோடு இரவாக முளைத்த விவகார போஸ்டர்கள் 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை  என்று அவரது அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 மே 2019, 6:49 am

IANS

லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை  என்று அவரது அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் மூன்றாவது முறையாக மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தியைக் காணவில்லை என்று அவரது அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபப்பு ஏற்பட்டுள்ளது. 

அமேதி தொகுதியில் இரவில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பொதுமக்கள் நிற்பது போன்ற படங்களுக்கு மத்தியில், "15 வருடங்கள் X 365 நாட்கள் = 5475 நாட்கள். எங்கே அமேதி தொகுதி எம்.பி?" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் எங்கே அச்சடிக்கப்பட்டது? யாரால் ஒட்டப்பட்டது என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை.

இரவோடு இரவாக முளைத்த இந்த போஸ்டர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் செய்த புகாரின் காரணமாக, உடனடியாக நீக்கப்பட்டன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.