புது தில்லி: கோட்ஸே குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், பெண் சாமியார் பிரக்யா உள்ளிட்ட மூவர் மீது, பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் என்று பாஜக தலைமை கருத்து தெரிவித்துள்ளது.
போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குரிடம் வியாழனன்று செய்தியாளர்கள், கோட்ஸே குறித்த கமலின் கருத்து குறித்து கேள்வி கேட்டனர் அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தராக இருந்தார். இப்போதும் தேசபக்தராக இருக்கிறார். இனியும் தேசபக்தராகதான் இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினைக் கற்றுத் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். பிரக்யாவின் கருத்தைத் தொடந்து பாஜகவின் ஆனந்த் ஹெக்டே, நளின் குமார் கடில் ஆகியோரும் இதே பொருளில் கருத்துகளைக் கூறி, ப்ரக்யாவுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தனர். ஆனால் ப்ரக்யாவின் கருத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோட்ஸே குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், பெண் சாமியார் பிரக்யா உள்ளிட்ட மூவர் மீது, பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் என்று பாஜக தலைமை கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பிரக்யா சிங் தாகுர், ஆனந்த் ஹெக்டே மற்றும் நளின் குமார் கடில் ஆகிய மூவரது கருத்துக்களும் அவர்களது சொந்த கருத்துக்களே. அதற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அவர்கள் தங்கள் கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதுடன் மன்னிப்புக் கேட்டு விட்டார்கள். ஆனாலும் பாஜக அவர்களது கருத்துக்களை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட மூன்று தலைவர்களிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் அந்த குழுவானது 10 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பி விடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


