
அகமதாபாத்: ரூ. 600 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் பாகிஸ்தானிய படகு ஒன்றை, இந்திய கடல் எல்லைக்குள் கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஜாக்வா கடல்பகுதியில் சர்வதேச கடல் எல்லைக்கு உட்பட்ட இந்திய பகுதியில், 'அல் மதினா' என்னும் மீன்பிடிப்படகு ஒன்றை கடலோர காவல்படை எதிர்கொண்டது.
அப்போது நிகழ்த்தப்பட்ட சோதனையில் அந்தப் படகில் 100 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்னும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 194 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த இதன் மதிப்பு சர்வதேச சநதையில் ரூ. 600 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை ஆகியவை இணைநது மேற்கொண்டுள்ளன.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.