
புது தில்லி: இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 306 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாவது:
ஒன்றிணைந்து நாம் வளர்வோம்
ஒன்றிணைந்து நாம் செழிப்படைவோம்
ஒன்றிணைந்து நாம் வலிமையான மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்தியாவை உருவாக்குவோம்.
இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. #இந்தியாவுக்கு வெற்றி
இவ்வாறு அவர் பதிவிட்டுளளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.