புதிய மக்களவையில் 475 எம்.பி.க்கள், கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:
539 புதிய எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், 475 எம்.பி.க்கள் கோடீஸ்வரராக உள்ளது தெரியவந்துள்ளது. இதில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் முதலிடத்தில் உள்ளார்.
மொத்தமுள்ள 542 புதிய எம்.பி.க்களில் 3 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ய முடியவில்லை. அதில் இரண்டு பேர் பாஜகவையும், ஒருவர் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்.
பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்ட 301 புதிய எம்.பி.க்களில் 265 பேர் (88 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவ சேனை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்.பி.க்களின் அனைவரின் சொத்து மதிப்பும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமானவை.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 51 எம்.பி.க்களில் 43 பேர் (96 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோன்று, தி.மு.க. 23 எம்.பி.க்களில் 22 பேரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 22 பேரில் 20 பேரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 22 எம்.பி.க்களில் 19 பேரும் கோடீஸ்வரர்கள்.
கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே உள்ளனர்.
அதன்படி, மத்திய பிரதேசம் சிந்த்வாரா தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.660 கோடியாகும். இவரையடுத்து, கன்னியாகுமரியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.வசந்த குமாரின் சொத்து மதிப்பு ரூ.417 கோடியாகவும், பெங்களூரு ஊரக தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே. சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.338 கோடியாகவும் உள்ளது என ஏடிஆர் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
ரஜினிகாந்த் 173 படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


