ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா? முதல்வர் பட்னவீஸ்?

மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :26 நவம்பர் 2019, 9:50 am

DIN


மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் தனது ராஜினாமா கடிதத்தை அஜித் பவார் அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை மாலை 4 மணிக்குள் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், துணை முதல்வராக பதவியேற்று 4 நாட்களிலேயே அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸும், இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் சந்திப்பின் போது தனது ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.