இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.   

சிகரெட், பீடி போன்றவற்றுக்கு மாற்றாக உலக அளவில் இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் அதிக ஆபத்தில்லாதவை எனக் கூறப்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளின் முடிவில், புகையிலை சிகரெட்டுக்கு நிகரான தீங்குகள் இந்த இ-சிகரெட்டாலும் ஏற்படும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இ-சிகரெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

எலக்ட்ரானிக் முறையில் நிகோடினை வெளியிடும் கருவிகள், இ-ஹுக்கா உள்ளிட்ட அனைத்து வகையான எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி மத்திய அரசின் அவசரச் சட்டமும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த மசோதாவின் படி, விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபருக்கும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, அல்லது 1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மின் சிகரெட்டுகளை சேமித்து வைத்திருக்கும் ஒருவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 50,000 டாலர் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த மசோதா தொடர்பான மக்களவை விவாதத்தின்போது பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், 'மின்-சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்களை நிறுத்துவது கடினம். எனவே, இ- சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கிறோம். சந்தைகளில் கிடைக்காத சூழ்நிலையில் மக்களால் எப்படி பயன்படுத்த முடியும்? சட்டத்தின் மூலம் முழுவதுமாக இ-சிகரெட்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com