தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அஜித் பவார் வாழ்த்து!

மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்ற உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 நவம்பர் 2019, 3:45 pm

DIN


மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்ற உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியிலும் கூட்டணியை உறுதி செய்தன. இதையடுத்து, இந்தக் கூட்டணியின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் 19-வது முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தனது டிவிட்டர் பதிவில் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், உத்தவ் தாக்கரே தலைமையில் மாநிலம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடையும் எனவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அது அஜித் பவாருக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மூன்று கட்சிகளும் பேச்சுவார்த்தையை இறுதி செய்த நிலையில், திடீரென்று ஒரே இரவில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அரசில் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.