ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள்!
மாநிலத்தில் வெங்காய தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.


தமிழகம், தில்லி, மும்பை உட்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயா்வு காரணமாக வெங்காயம் பதுக்கலுக்கு வித்திட்டுள்ளதாக வா்த்தக பகுப்பாய்வாளா்கள் கூறுகின்றனா்.
மேலும், அதிக மழை, பாரம்பரிய முறை காரணமாக சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் அழிந்துவிட்டது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் சூழல் பிகாரில் ஏற்பட்டுள்ளது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிகார் அரசு, கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ரோஹித் குமார் எனும் கூட்டுறவு அங்காடி ஊழியர் கூறுகையில்,
மாநிலத்தில் வெங்காய தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. எனவே பிகார் அரசு கூட்டுறவு அங்காடி மூலம் குறைந்த விலையில் (ஒரு கிலோ ரூ.35) விற்பனை செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருவதால் கல்வீச்சு சம்பவங்களும், கலவரங்களும் ஏற்படுகிறது.
இதில் எங்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகிறது. போதிய பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே வேறு வழியின்றி எங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விநியோகிக்கிறோம் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...