காந்தியடிகளின் பிறந்ததினம்: நாடு முழுவதும் உள்ள 600 சிறைக் கைதிகள் விடுதலை!

காந்தியடிகளின் பிறந்ததினத்தை முன்னிட்டு,  நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் உள்ள 600 கைதிகள் இன்று விடுவிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காந்தியடிகளின் பிறந்ததினம்: நாடு முழுவதும் உள்ள 600 சிறைக் கைதிகள் விடுதலை!

காந்தியடிகளின் பிறந்ததினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் இருந்து 600 கைதிகள் இன்று விடுவிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினவிழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் இருந்து 600 கைதிகள் இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஊழல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தவிர மற்ற கைதிகள் 600 பேர் விடுவிக்கப்படுவார்கள். இந்தக் கைதிகள் அனைவரும் சிறப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட உள்ளனர். 

ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சிறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 80 குற்றவாளிகளின் விடுதலையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் முடிந்த பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லி திஹார் சிறையில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து சிறைக் கைதிகளில் மூன்று பேரை மட்டுமே விடுவிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த மூவரில் இரு கைதிகள் முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று திகார் சிறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com