மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வழக்கறிஞர்களுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் கெஜ்ரிவால் அரசு!

வழக்கறிஞர்களின் நலனை மேம்படுத்தும் விதமாக, சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்    தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 செப்டம்பர் 2019, 7:20 am

IANS

வழக்கறிஞர்களின் நலனை மேம்படுத்தும் விதமாக, சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்    தெரிவித்துள்ளார். 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கெஜ்ரிவால் அரசு, தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. 

அடுத்ததாக, நீதித்துறையில் பணிபுரிபவர்களுக்கு கெஜ்ரிவால் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளது. அதன்படி, வழக்கறிஞர்களுக்கு ரூ.50 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. 

இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "வழக்கறிஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.50 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வழக்கறிஞர்களுக்கான திட்டங்களை அறிவிப்பது குறித்து ஆளுநர் அனில் பைஜால், தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின்னரே, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.