உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தினர்
எல்லைப் பகுதியில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றனர்.


எல்லைப் பகுதியில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றனர்.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லையை ஒட்டியும் பாகிஸ்தான் படையினர், தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி, காஷ்மீரின் ஹாஜிபுர் செக்டார் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே, அத்துமீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்த சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் 2 வீரர்களின் உடல்களை, வெள்ளைக் கொடியுடன் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் வீரர்கள், எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Courtesy ANI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...