ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ வெள்ளிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தது. அவருக்கு ஜாமீன் வழங்குவது

News image
கோப்புப் படம்
Updated On :20 செப்டம்பர் 2019, 8:02 pm

DIN


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ வெள்ளிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தது. அவருக்கு ஜாமீன் வழங்குவது, ஊழல் வழக்குகளில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த மாதம் கைது செய்தது. பின்னர், சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், கடந்த 5-ஆம் தேதி நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை அக்.3-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். 
அந்த மனு மீது பதிலளிக்கும்படி, சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பதிலில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நிதி முறைகேட்டின் தீவிரம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும்; அவருக்கு ஜாமீன் வழங்குவது, ஊழல் வழக்குகளில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.