உத்தரப்பிரதேச விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லிக்கு பேரணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஏராளமானோர் தில்லிக்கு சனிக்கிழமை பேரணி மேற்கொண்டுள்ளனர்.


உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில விவசாயிகள் ஏராளமானோர் தில்லிக்கு சனிக்கிழமை பேரணி மேற்கொண்டுள்ளனர்.
விவசாயக்கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத்தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நொய்டா 69-ஆவது செக்டரில் தொடங்கியுள்ள இந்தப் பேரணி தில்லி கிசான் கட் வரை நடைபெறவுள்ளது.
முன்னதாக, பாரதிய கிசான் சங்கதன் மற்றும் விவசாய அமைச்சரவை உள்ளிட்டவற்றுடன் நொய்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்.11-ஆம் தேதி மின்சாரக் கட்டணம் உயர்வைத் தொடர்ந்து இந்தப் பேரணி தொடங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...