ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்!

ஐஐஎஃப்எல் வெல்த்-ஹரூன் இந்தியா செல்வந்தர்கள் பட்டியலில் (IIFL Wealth Hurun India Rich List 2019) ரூ.3,80,700 கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார். 

News image
Updated On :26 செப்டம்பர் 2019, 7:34 am

DIN

ஐஐஎஃப்எல் வெல்த்-ஹரூன் இந்தியா செல்வந்தர்கள் பட்டியலில் (IIFL Wealth Hurun India Rich List 2019) ரூ.3,80,700 கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார். 

தொடர்ந்து 8வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக ஐ.ஐ.எஃப்.எல். பட்டியலில் திகழ்கிறார்.

இந்தப் பட்டியலின்படி 25 இந்தியப் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இந்திய ஜிடிபியில் 10% ஆகும், 953 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு இந்திய ஜிடிபியில் 27% ஆகும்.

லண்டனைச் சேர்ந்த ஹிந்துஜா & குடும்பத்தினரின் சொத்துமதிப்பு 1,86,500 கோடியுடன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளனர், 3வது இடத்தில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ரூ.117,500 கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார்.

அதேபோல் 2018-ல் ரூ.1000 கோடிக்கும் மேல் சொத்துமதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 831 ஆக இருந்தது இந்த ஆண்டு 953 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டின் படி இந்தியாவின் பில்லியனர்கள் எண்ணிக்கை 141லிருந்து 138 ஆகக் குறைந்துள்ளது.

ஆர்சலர் மிட்டலின் சி.இ.ஓ., எல்.என்.மிட்டலின் சொத்து மதிப்பு ₹1,07,300 கோடி, இவர் 4ம் இடத்தில் உள்ளார். கவுதம் அதானி ரூ.94,500 கோடியுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.

டாப் 10-ல் உள்ள மற்றவர்கள்:

உதய் கோடக் (94,100 கோடி) 6வது இடம்
சைரஸ் எஸ்.பூனாவாலா 7வது இடம் (₹88,800 கோடி)
சைரஸ் பலோஞி மிஸ்ட்ரி 8வது இடம் (₹76,800 கோடி)
ஷபூர் பலோன்ஜி 9வது இடம் (₹76,800 கோடி)
திலிப் ஷங்வி 10வது இடம் (ரூ. 71,500-கோடி)

பட்டியலில் உள்ள 26% அதாவது, 246 நபர்கள் மும்பையில் உள்ளனர், புதுடெல்லியில் 175 செல்வந்தர்களும், பெங்களூருவில் 77 செல்வந்தர்களும் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.