
புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் மந்திரி ரவிசங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை 'காவலாளி ஒரு திருடன்' என விமர்சித்து வருகிறார். அத்துடன் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாகவும் பிரதமருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்.
எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அவர் தொடந்து மீறி வருகிறார். எனவே அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்திருக்கிறோம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...